இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் களத்தில் கோவப்பட்ட தருணங்களை முன்னாள் வீரர்களான இர்பான் பதான், கவுதம் காம்பீர் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பல உள்ளது. ஆனால் தோனி உலகத்தரமான தலைவர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் பல உச்சங்களை எட்டியுள்ளது. மேலும் தனது கூலான நடவடிக்கை காரணமாக தோனியை பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி பல தருணங்களில் கோவப்பட்டதாக முன்னாள் வீரர்களான இர்பான் பதான், மற்றும் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில், “கடந்த 2006-07 இல் நடந்த பயிற்சி போட்டியில், வலது கை பேட்ஸ்மேன்கள் எல்லாம் இடது கை பேட்ஸ்மேன்களாக விளையாட வேண்டும் என்று விளையாடினோம். ப்போது தோனிக்கு அவுட் வழங்கப்பட்டது. ஆனால் தோனி தான் அவுட் என நினைக்கவில்லை. அதனால் ஆத்திரமான தோனி, டிரெசிங் ரூமில் பேட்டை கோவமாக வீசினார். மேலும் பயிற்சிக்கும் லேட்டாக வந்தார். அவரும் கோவத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்” என்றார்.
இதேபோல மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரும் தோனி தனது பொறுமையை இழந்த தருணம் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “மக்கள் தோனி பொறுமையிழந்து பார்த்ததே இல்லை என தெரிவிக்கின்றனர். கடந்த 2007 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் மற்ற உலகக்கோப்பை தொடரிலும் சரியாக செயல்படாது போதும் தோனி கோவமடைந்துள்ளார். அவரும் மனிதன் தான், பல நேரத்தில் கோவமடைந்துள்ளார். அப்படி கோவமடைவது எவ்வித தவறும் இல்லை . சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போதும் பீல்டிங் தவறு நடந்தால் தோனி பொறுமையிழப்பார். ஆனால் ஒரே ஒரு விஷயம் தோனி என்னைவிட மிகவுன் கூலானவர்” என்றார்.
இதேபோல மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, மற்றும் முகமது ஷமி உள்ளிட்டோரும் தோனி கோவப்பட்டதாக தெரிவித்தனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தோனி தனது குளிர்ச்சியை இழந்துவிட்டார் என்பதைக் கண்டறிவது அரிது; மூத்த கிரிக்கெட் வீரர் ஒருபோதும் எல்லையைத் தாண்டவில்லை. இதற்கிடையில் தோனி தனது மகள் ஜிவாவுடன் தனது பண்ணைவீட்டில் வெள்ளை தாடியுடன் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Be the first to comment on "ஒண்ணு ஒண்ணா வெளிய வருதே. தல தோனி ஒன்னும் கூல் இல்ல. ஆத்திரத்தில் பேட்டை வீசினார்: இர்பான்!"