என்னை இப்பிடி கூப்பிட நீ இல்லையே தல… சஹால் செண்டிமெண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால், தோனியை அதிகம் தவறவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்த 10 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில் இவரால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்க முடியாது என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர்.

அதிக ஆர்வம்
கடைசியாக தோனி கடந்த 2019 இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்றார். அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டில் அணியில் இருந்து தானே விலகியிருந்தார். மேலும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி பங்கேற்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க அவரின் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

ரசிகர்களை போலவே
இந்நிலையில் ரசிகர்களைப் போலவே இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால், ஸ்டெம்பிற்கு பின்னால் தோனியை அதிகம் தவறவிடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ள சஹால் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஜாம்பவான் என்னை டிட்டி என கூப்பிடுவதை நான் அதிகம் தவறவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2004 இல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான தோனி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கிடையில் தோனி தனக்கு வழியனுப்பு போட்டி நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

Be the first to comment on "என்னை இப்பிடி கூப்பிட நீ இல்லையே தல… சஹால் செண்டிமெண்ட்!"

Leave a comment

Your email address will not be published.


*