ஒருநாள் போட்டியின் போது பந்து வீசும்போது தனது அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்காததற்காக குல்தீப் யாதவ் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியிடமிருந்து வாய்மொழியாக திட்டித் தீர்த்தார்.
தோனி 20 வருடங்களில் முதல்முறையாக இலங்கைக்கு எதிரான போட்டியின் போது தன்னுடைய பொறுமையை இழந்தார். குல்தீப் யாதவ் அன்று மரண பயத்திலிருந்தார், அவருக்கு அப்போது காரணமும் இருந்தது. 2017ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பந்து வீசும்போது, தனது அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்காததற்காக தோனியிடம் வாய்மொழியாகத் திட்டு வாங்கியது குல்தீப் யாதவ் தான். “குசல் பெரேரா ஒரு பவுண்டரி அடித்தார். தோனி பாய் விக்கெட்டின் பின்னால் இருந்து கூச்சலிட்டு என்னை ஃபீல்டிங் மாற்றச் சொன்னார். அவரது ஆலோசனையை நான் கேட்கவில்லை, அடுத்த பந்து, குசல் மற்றொரு பவுண்டரியை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் அடித்தார்,” என்று குல்தீப் இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் ஜட்டின் சாப்ருவிடம் கூறினார்.
அடுத்து என்ன நடந்தது என்பது குல்தீப் எதிர்பார்க்காத ஒன்று.
“… தோனி என்னிடம் கோபமாக வந்து, “நான் 300 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளேன், ஆனால் நீ நான் சொல்வதைக் கேட்கவில்லை,” என்றார்.
மிகவும் பயந்த உ.பி சுழற்பந்து வீச்சாளர் மன்னிப்பு கேட்க அணி பேருந்தில் தோனி வரை சென்று, கடந்த காலத்தில் இதுபோன்ற அமைதியை இழந்துள்ளாரா என்று கேட்டார்.
‘அன்று நான் அவரைப் பார்த்து மிகவும் பயந்தேன். போட்டி முடிந்த பிறகு, அணி பேருந்தில் அவரிடம் சென்று, இதற்கு முன்பு கோபமடைந்துள்ளீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘கடந்த 20 வருடங்களில் நான் கோபப்பட்டது இல்லை என்றார்’”.
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்று வெளியேறியதிலிருந்து தோனி, எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.
அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடவிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.M
Be the first to comment on "20 வருடங்களில் முதல்முறையாகக் கோபமடைந்த தோனி… காரணத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ்!"