புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நம்பமுடியாத சக்தி மற்றும் தன்னம்பிக்கை தான் அவரை மிகச்சிறந்த வீரராக உருவாக்கியதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அனைவரும் இவரின் ஓய்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் அவரின் ரசிகர்கள் தோனியின் ரீஎண்ட்ரிக்காக காத்திருக்கின்றனர்.
இதற்காக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நுழைவாயிலாக தோனி வைத்திருக்க, கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தோனி ஏன் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசி கூறுகையில்,“கிரிக்கெட்டில் இதுவரை இருந்த வீரர்களில் தோனி தான் மிகச்சிறந்த பினிஷர். தனது கூலான செயல்பாடுகளால் எதிரணி கேப்டனை விழிபிதுங்க செய்வார். தோனியிடம் நம்ப முடியாத சக்தி உள்ளது. எப்போது பவுண்டரி எல்லையை கடந்து பந்தை அனுப்ப வேண்டும் என அவருக்கு தெளிவாக தெரியும். அதை அவர் சரியாக செய்வார்.
மேலும் தோனியிடம் அதிக தன்னம்பிக்கை உள்ளது. என்னிடம் அந்தளவு தன்னம்பிக்கை இல்லை. மிகப்பெரிய இலக்குகளை நம்பிக்கையுடன் துரத்துவது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன். பதட்டப்பட்டால் தோல்வியே மிஞ்சும் என்பதையும் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன். அதனால் தோனி எப்போதும் கூலாகவே இருப்பார்” என்றார்.
Be the first to comment on "அதுல தாண்டா தல தோனி ஸ்பெஷலிஸ்டே… மைக் ஹசி!"