சச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் சச்சின், ஹிமா தாஸ் உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.

‘கொரோனா’ வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்குகிறது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், ஐ.பி.எல்., உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு விளையாட்டு அமைப்புகள் மற்றும் நட்சத்திரங்கள் நிதியுதவி அளிக்கின்றனர். பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி (ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி), முன்னாள் இந்திய கேப்டன் தோனி (ரூ. ஒரு லட்சம்), இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான், யூசுப் பதான் (4000 ‘மாஸ்க்’), இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து (ரூ. 10 லட்சம்), இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா (6 மாத சம்பளம்), அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ. 8 கோடி), போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 8 கோடி) உள்ளிட்டோர் நிவாரண நிதி அளித்துள்ளனர்.

சச்சின் ரூ. 5லட்சம்

இப்பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் இணைந்துள்ளார். இவர், பிரதமர் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்காக தலா 25 லட்சம் வழங்கினார். இதுகுறித்து ‘டுவிட்டரில்’ சச்சின் வெளியிட்ட செய்தியில், ”கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பை செலுத்துவது சமுதாயக் கடமை. நாம் அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது. ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி விலகி இருந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். மனதால் ஒருங்கிணைந்து போராடினால் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வெற்றி பெற முடியும்,” என, தெரிவித்திருந்தார்.

Be the first to comment on "சச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு"

Leave a comment

Your email address will not be published.


*