இது மிகப்பெரிய சோதனைக் காலம்… தயவு செஞ்சு ஒற்றுமையா இருங்க: கோலி, அனுஷ்கா வேண்டுகோள்!

இந்தியாவில் பரவும் கொரோனாவை தடுக்க நாடு முழுதும் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடக்கம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் இந்த 21 நாட்கள் கால கட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கைகூப்பி உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மக்கள் இந்த தடை காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 51 வினாடி வீடியோவில், “இது மிகப்பெரிய சோதனைக் காலம். இந்த சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நமக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டார்.

முன்னதாக 21 நாட்கள் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு ஒரே தீர்வு என விளக்கம் அளித்தார். இந்த முடிவை இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி வரவேற்றதுடன், அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்தார்.

Be the first to comment on "இது மிகப்பெரிய சோதனைக் காலம்… தயவு செஞ்சு ஒற்றுமையா இருங்க: கோலி, அனுஷ்கா வேண்டுகோள்!"

Leave a comment

Your email address will not be published.


*