ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. இந்திய அணி கடைசியாக 2018-19 ஆஸ்திரேலிய பயணத்தின் போது பெர்த் டெஸ்டில் (டிசம்பர் மாதம்) 146 ரன்னில் தோற்றது. தற்போது 13 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் அறிமுகமானது. இதில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) தொடர்களை கைப்பற்றியது. 7 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. தனது 8-வது டெஸ்டில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. இந்தியா 7 வெற்றி, 1 தோல்வியுடன் 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 2 வெற்றி, 4 தோல்வியுடன் 120 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (296), இங்கிலாந்து (146), பாகிஸ்தான் (140) ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 4-வது இடங்களில் உள்ளன. இலங்கை 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 8-வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
பிரித்விஷா போன்றவர்களை குறை சொல்ல வேண்டாம். 2 வெளிநாட்டு டெஸ்டுகளில் தான் ஆடியுள்ளார். ரன்களை எடுப்பது எப்படி என்று அவர் மேம்பட்டு வருகிறார். பேட்டிங்கில் அகர்வால். ரகானேவை தவிர மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கி மிகப் பெரிய ஸ்கோரை குவித்தால் தான் பந்து வீச்சாளர்கள் சவால் கொடுக்க முடியும். இதுதான் நமது பலம், இந்த டெஸ்டில் இந்த அம்சம் இல்லாமல் போனது
இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தோல்வியால் உலகமே முடிந்து போய் விடவில்லை. நாங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று இருக்கிறோம். வெளிநாடுகளில் விளையாடும் போது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நான் நன்றாக இருக்கிறேன். எனது பேட்டிங சிறப்பாகவே இருக்கிறது. ரன்களை குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை. நியூசிலாந்து பயணத்தில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ஓவர் போட்டிகளில் 45, 11, 38, 11, ஒருநாள் ஆட்டங்களில் 51, 15, 9, இந்த டெஸ்டில் 2 மற்றும் 19 ரன்கள் எடுத்தார்.
Be the first to comment on "ஐசிசி டெஸ்டில் முதல் தோல்வியை தழுவிய இந்திய அணி"