அறிமுக
போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி
இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார் கைல் ஜேமிசன். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. தேனீர் இடைவேளை வரை மட்டுமே நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 122 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து அணியில் அறிமுகம் ஆகியுள்ள உயரமான பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன்தான். இவர் புஜாரா (11), விராட் கோலி (2), விகாரி (7) ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம் என்று கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
கைல் ஜேமிசன் கூறுகையில் ‘‘முதல்
நாள் ஆட்டத்தில் நடந்ததை என்னால் நம்ப
முடியவில்லை. அணியின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது
நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம்.
விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்.
அவர்களுடைய பேட்டிங் வரிசைக்கு அவர்தான்
முக்கிய துருப்புச்சீட்டு. அவரை முன்னதாகவே வீழ்த்தியது
எங்களுக்கு மிகப்பெரிய தருணம்.
புஜாரா உள்பட முக்கியமான இரண்டு
விக்கெட்டுகளை முன்னதாகவே வீழ்த்தும்போது வெளிப்படும் எமோசன் மிகவும் சிறப்பு
வாய்ந்தது.
உலகின் எல்லா இடங்களிலும் ரன்கள்
குவிப்பவர் விராட் கோலி. ஆஃப்
ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால்
விராட் கோலி திணறுவார் என்ற
ஒரே திட்டத்துடன் சென்றால் அது புத்திசாலித்தனமாக
இருக்காது. ஆடுகளம் எப்படி ஒத்துழைக்கிறதோ,
அதற்கு ஏற்ப திட்டம் தீட்டி
அவரை விளையாட வைக்க விரும்புவோம்.
ஸ்டம்பில் வீசம் பந்தை எதிர்கொள்வதில்
அவர் வல்லவர். நான் முதலில்
சற்று திணறினேன். அதன்பின் சமாளித்து பந்து
வீசிய சிறப்பானது’’ என்றார்.
இந்நிலையில் இரண்டாவதுநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரிஷாப் பண்ட் 19(53 பந்துகள்) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ரன்களும், இஷாந்த் சர்மா 5(23) ரன்களும், முகமது சமி 21(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
Be the first to comment on "விராட் கோலியை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்: கைல் ஜேமிசன் சொல்கிறார்"