‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி

ஆர்சிபி போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன; கேப்டனிடம் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் தூக்கத்தில் கூட, ‘எங்கள் அணி போட்டியை வெல்லவில்லை; இதயத்தை வென்றுவிட்டது’ என்பார்கள். அவ்வளவு வெறித்தன ரசிகர்களைக் கொண்ட ஆர்சிபிக்கு ஏனோ கோப்பை என்பது கனவாகவே உள்ளது. குறைந்தபட்சம் ஒவ்வொரு தொடரிலும் ஆதிக்கம் கூட செலுத்த முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் சீசனில் என்ன செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, ‘ஆட்டோ கண்ணாடியை மாற்றினால் வெற்றி’ என்று முழங்கியிருக்கிறது அந்த அணி நிர்வாகம்.

கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று பெங்களூரு அணி. இந்த அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார்அதாவது அணியின் பெயரை, லோகோவை மாற்றப் போகிறார்களாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த விராட் கோலி, பெங்களூரு அணியின் கேப்டனாக சொல்லிக்கொள்ளும் அளவு சாதிக்கவில்லை. ஆண்டுக்கு ஆண்டுக்கு அந்த அணியின் நிலை மிகவும் பரிதாபமடைந்து வருகிறது.

கோலி, டிவிலியர்ஸ், கிறிஸ் கெயில் என நட்சத்திர பட்டாளமே இருந்து அந்த அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியாதது ஏன் என அந்த அணியின் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் வரும் 2020 ஐபிஎல், தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனை மாற்றலாம் என அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கிசு கிசுக்கப்பட்டது. இந்த தகவல் உண்மையா என பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹசன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மைக் ஹசன் கூறுகையில், ‘அணியை விராட் கட்டுப்படுத்துவதில் எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை.

இதனால் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் ஆர்சிபி பக்கங்களில் லோகோ நீக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டா பேஜில் தனது போஸ்ட்களையே நீக்கிவிட்டது நிர்வாகம்.

இதைப் பார்த்து ஜெர்க் ஆன ஆர்சிபி வீரர் சாஹல், ‘என்னயா பண்ணி வச்சிருக்கீங்க?’ மோடில் ட்வீட் செய்ய,

கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில், “ஆர்சிபி போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன; கேப்டனிடம் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று காண்டாகி பதிவிட்டுள்ளார். கேப்டனுக்கே கம்யூனிகேஷன் இல்லையா!

Be the first to comment on "‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி"

Leave a comment

Your email address will not be published.


*