இந்த பாம்பு டான்ஸ் பசங்களுக்கு ஐசிசி கண்டிப்பா ஆப்பு வைக்கும்… இந்திய டீம் மேனேஜர்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரின் ஃபைனலுக்கு பின் இந்திய அணி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கதேச வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது.

இப்போட்டியில் இரு அணி வீரர்களும் களத்தில் வெறித்தனமாக காணப்பட்டனர். ஆனால் வெற்றிக்கு பின் உற்சாகத்தில் மைதானத்துக்குள் ஓடி வந்த இளம் வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை வெறுப்பேற்றினர். இதையடுத்து இரு அணி வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீயைவிட வைரலாக பரவியது.

இப்போட்டியின் நடுவே சீனியர் கிரிக்கெட் வீரர்களை மிஞ்சும் அளவு மறைமுக மோதல், காணப்பட்டது. அப்போதே இரு அணி வீரர்களும் வெறித்தனமாக காணப்பட்டனர். தொடர்ந்து ஃபைனலில் வெற்றி பெற்றபின் சில வங்கதேச வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரர்களை வெறுப்பேற்றும் விதமாக செயல்பட்டனர்.

இதையடுத்து இரு அணி வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீயைவிட வைரலாக பரவியது. இந்த அசம்பாவிதம் குறித்து இந்திய அணி கேப்டன் பிரியம் கார்க் கூறுகையில்,“நாங்கள் எளிதாக எடுத்துக்கொண்டோம். போட்டியில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். ஆனால் அவர்கள் படுமோசமாக செயல்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறியிருக்க கூடாது” என்றார்.


இந்த அசம்பாவிதம் குறித்து வங்கதேச கேப்டன்  கிரிக்கெட் அணியின் கேப்டன் அக்பர் அலி வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த அநாகரீக வங்கத்கேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் படேல் கூறுகையில், “மைதானத்துக்குள் சில நிமிடங்கள் என்ன நடந்தது என தெரியவில்லை. இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியின் கடைசி நிமிட வீடியோவை ஐசிசி ஆய்வு செய்யவுள்ளது. அதற்கு பின் தான் என்ன நடக்கும் என்பது தெரியவரும். போட்டிக்கு பின் போட்டி நடுவர் நிகழ்ந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதற்கு பின் இந்த விஷயத்தை ஐசிசி தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்றும். வீடியோவை முழுமையாக பார்த்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்” என்றார்.

Be the first to comment on "இந்த பாம்பு டான்ஸ் பசங்களுக்கு ஐசிசி கண்டிப்பா ஆப்பு வைக்கும்… இந்திய டீம் மேனேஜர்!"

Leave a comment

Your email address will not be published.


*