நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும்- கிரேக் மெக்மில்லன்

Ind vs Nz: இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இரண்டையாவது நியூசிலாந்து கைப்பற்ற வேண்டும் என கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நியூசிலாந்து இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்றிலும் படுதோல்வி அடைந்தது.

இதனால் பாஸ் பார்க் எடுக்க இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரேக் மெக்மில்லன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவில் படுதோல்வியை சந்தித்த பிறகு இந்தியா தொடர் மிகப்பெரியது. தற்போதுள்ள இந்திய அணி மிகவும் வலிமை மிக்கது. டெஸ்ட், டி20, ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் திறமையாக எதிர்கொள்வார்கள். இதனால் இந்தத் தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்தத் தொடரில் நியூசிலாந்து பாஸ் மார்க்கை எடுக்க இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும்.

ஐந்து டி20 கிரிக்கெட் தொடர் முதலில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் என்பதற்கு யாரும் சாதகமாக இருக்கமாட்டார்கள். ஆனால், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இந்த ஐந்து போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’’ என்றார்.

இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் 1990-களில் வேகப்பந்து வீச்சு சாதகமான வகையில் இருந்தன. 2009-களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் மாற்றப்பட்டன.

நாங்கள் 2009-ல் விளையாடும்போது ஹாமில்டன் ஆடுகளம் மற்ற ஆடுகளத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வெலிங்கடன், நேப்பியர் ஆடுகளங்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஹாமில்டன் அப்படி இல்லை’’ என்றார். இந்நிலையில், ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டன என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தோள் பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத ஷிகர் தவானின் டி20 இடத்திற்கு சஞ்சனும், ஒருநாள் போட்டிக்கான இடத்திற்கு பிரித்வி ஷாவும் களமிறங்க உள்ளனர்.

Be the first to comment on "நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும்- கிரேக் மெக்மில்லன்"

Leave a comment

Your email address will not be published.


*