இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி பெங்களுருவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில், வார்னர், ஆரோன், மார்கஸ் லபுஷானே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ஆஷ்டன் அகர், பாட் கமின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் , ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
ரோஹித் சதம்
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (131) சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய துவக்க வீரர் ராகுல் (19) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 119 ரன்கள் அடித்து அவுட்டானார்.
கேப்டன் கோலி
அடுத்து வந்த கோலி தனக்கு அதிகம் பழக்கப்பட்ட பெங்களுரு மைதானத்தில் ஆஸி பவுலர்கள் அலறவிட்டார். இவர் 91 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிதனமாக தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 117 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதனிடையே ஒரு நாள் போட்டிகளில் ஸ்மித் 4000 ரன்களை கடந்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார். 110 பந்துகளை சந்தித்த ரோகித் 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 100 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஷேசிங்கிற்கு பெயர் போன பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டது.
Be the first to comment on "ஆஸியை தூசியாக்கிய ரோஹித்… கோப்பை வென்ற இந்திய அணி!"