ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்

இதன் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டியில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர் மாணவன் ரிஷப் பண்ட் 33 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை எடுத்தார். இவர் அந்தப் போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி பேட்டிங் செய்யும்போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப்பின் தலைக்கவசத்தின் அடித்தனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் கீப்பிங் செய்தார். இந்நிலையில் காயம் காரணமாக இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்காமல் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மூளையில் பயங்கர அதிர்வு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு சிறிய அளிக்கப்பட சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கம்மின்ஸ் பவுண்சர்

இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 25 ரன்கள் அடித்த போது கம்மின்ஸ் வேகத்தில் அவுட்டானார். கம்மின்ஸ் வீசிய பந்து பந்த்தின் பேட்டில் பட்டு, பின் ஹெல்மெட்டில் பட்டு அதை டர்னர் கேட்ச் பிடித்தார். அப்போது பந்த்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், தொடர்ந்து அவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால் ரிஷப் பந்துக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். காயமடைந்த பந்துக்கு பதிலாக மாற்று வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

பெங்களூரில் சிகிச்சை

இந்திய அணி வீரர்கள் இன்று ராஜ்கோட் சென்ற நிலையில், ரிஷப் பந்த் விதிகளின் படி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூளை அதிர்வு காயத்துக்கான மாற்று வீரர் விதியை ஐசிசி அமல்படுத்திய பின் இந்திய அணியில் காயமடைந்த முதல் வீரர் ரிஷப் பந்த் தான்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூளை அதிர்வு காரணமாக பந்த் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சிகிச்சைக்கு பின் தான் கடைசி ஒருநாள் போட்டியில் பந்த் பங்கேற்பாரா அல்லது பங்கேற்கமாட்டாரா என்பது தெரியவரும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment on "ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்"

Leave a comment

Your email address will not be published.


*