ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் பட்டியலான இதில் தொடர்ந்து விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே தங்களது இடங்களை விட்டுக்கொடுத்து அதிலிருந்து கீழிறங்கியுள்ளனர்
விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்
ஆண்டின் முதல் பட்டியல் வெளியீடு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் தொடர்கள், வீரர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையாக கொண்டு ஐசிசி அவ்வப்போது தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
928 புள்ளிகளுடன் முதலிடம் கடந்த ஆண்டிலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்த கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டிலும் அதை தொடர்ந்துள்ளார். 928 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
6வது இடத்திற்கு இறங்கிய புஜாரா சத்தீஸ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் ஒரு இடம் கீழிறங்கி 6வது இடத்திலும் 759 புள்ளிகளுடன் அஜிங்க்யா ரஹானே 9வது இடத்திலும் உள்ளனர்.
911 புள்ளிகளுடன் 2வது இடம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். அவர் 911 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்
நியூசிலாந்திற்கு எதிராக அபாரம் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 215 மற்றும் 59 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே, தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் 549 ரன்களை இவர் குவித்துள்ளார்.
அடுத்த இடங்களில் நீல் வாக்னர், ஜேசன் ஹோல்டர் ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கமின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை நீல் வாக்னர் 852 புள்ளிகளுடனும் ஜேசன் ஹோல்டர் 830 புள்ளிகளுடனும் தொடர்கின்றனர்.
9, 10 இடங்களில் அஸ்வின், ஷமி காயம் காரணமாக ஓய்விலிருந்த ஜஸ்பிரீத் பும்ரா, 794 புள்ளிகளுடன் 6வது இடத்திலேயே நீடிக்க, 9 மற்றும் 10வது இடங்களில் ரவிச்சந்திரன அஸ்வின் மற்றும் முகமது ஷமி உள்ளனர்.
பேட்டிங், பௌலிங்கில் முன்னேற்றம் நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் முன்னேறியுள்ளார். பேட்டிங்கில் 47வது இடத்திலிருந்து 39வது இடத்திற்கும் பௌலிங்கில் 36லிருந்து 34வது இடத்திற்கும் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
Be the first to comment on "ஐசிசி டெஸ்ட் தரவரிசை: நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி!"