டெல்லி: இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ஃபார்மைச் சுற்றியுள்ள அனைத்து பேச்சுக்களையும் அவர் நிராகரித்தார். ஏனெனில் அந்த பயிற்சி ஆட்டத்தில் ஹர்திக் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்ததுடன், இரண்டு பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட இந்தியா மொத்தம் 182/5 ரன்களை குவிக்க உதவினார்.
மேலும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மைச் சுற்றி நிறைய பேச்சுக்கள் உள்ளன. அதேசமயம் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தபோது ஹர்திக் பாணடியாவின் தேர்வு ஒரு முக்கிய பேசும்பொருளாக மாறியது.
ஏனெனில் நடந்துமுடிந்த 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் அந்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையைத் தாங்கினார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியது மட்டுமல்லாமல், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2016ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக களமிறங்கியதிலிருந்து ஹர்திக் பாண்டியா அனைத்து வடிவங்களிலும் தனது ஆல்ரவுண்ட் பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். ஆனால் 2018 ஆசியக்கோப்பையில் முதுகில் ஏற்பட்ட காயம் மற்றும் 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அவர், இதுவரை 92 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 1348 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் நியூயார்க்கிலுள்ள உள்ள நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பயிற்சி ஆடட்த்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தை குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா தனது விமர்சகர்களை அமைதிப்படுத்தியதாகக் கூறினார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு கேள்விக்குறிகள் இருந்தன. அவை தற்போது அழிக்கப்பட்டன. அவரை எந்தளவுக்கு வீழ்த்த முயற்சிக்கிறீர்களோ, அவர் அந்த அளவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்கிறார். எப்படி ஒரு வைரம் தொடர்ந்து தீட்டதீட்ட பிரகாசிக்கிறது. அதேபோல ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக வருவார்” இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்."