நியூ யார்க்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஜூன் மாதம் நடைபெறத் தொடங்கியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இத்தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க டி20 உலகக்கோப்பை போட்டியை வரும் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் களமிறங்கவுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெனில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், தான் போட்டிக்கு தயாராக இருப்பதாகவும், தனது தோல்விகள் மற்றும் வெற்றிகளில் இருந்து பல விஷயங்கள் தான் கற்றுக்கொண்டதாகவும் கூறினார். 2014ஆம் ஆண்டு சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் அறிமுகமாகியுள்ளார். கடந்த பத்து வருடங்களில் இந்தியாவுக்காக வெறும் 25 டி20 மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளார்.
மேலும் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் தனது அணியை அரையிறுதிச்சுற்று வரை அழைத்துச் சென்று தோல்வியைத் தழுவினார். இருப்பினும் 48.27 சராசரி மற்றும் 153.46 ஸ்ட்ரைக் ரேட் உட்பட ஐந்து அரை சதங்களுடன் 531 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடருகக்கான இந்திய அணியில் நுழைந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட வீடியோவில், சாம்சன் தனது விளையாட்டை மாற்றியமைக்க போவதாகவும், எந்த வடிவ கிரிக்கெட்டானாலும் தனது இதுவே முதல் உலகக்கோப்பை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பைக்கு நன்கு தயாராகவும், சிறந்த அனுபவம் வாய்ந்தவராகவும் களமிறங்கவுள்ளேன். கடந்த 10 வருடங்களில் நான் நிறைய தோல்விகளையும், அங்காங்கே சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். ஆனால் நடப்பு சர்வதேச டி20 உலகக்கோப்பைக்கு போட்டிக்கு முன்னதாக நான் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.
நடந்துமுடிந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அழுத்தம் இருந்தபோதிலும், உலகக்கோப்பைத் தேர்வு பற்றிய எண்ணங்கள் தான் என் மனதில் அதிகமாக இருந்தது. இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடர் எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று. நடந்துமுடிந்த ஐபிஎல் தொடர் எனக்கு ஒரு நல்ல சீசனாக இருந்ததை நான் அறிவேன். ஆனாலும் அது எவ்வளவு கடினமானது, அணியின் தேவைகள், நிர்வாகம் போன்றவற்றைச் சார்ந்தது என்று எனக்கு நன்றாக தெரியும்.
ஆனால் ‘சஞ்சு நீ ரெடி’ என்று நான் உறுதியாக நம்பிய தருணத்தில், வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு திருப்பிக் கிடைத்தது. இதை நான் அப்படித்தான் பார்க்க விரும்புகிறேன்” இவ்வாறு சாம்சன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "கடந்த 10 ஆண்டுகளில் நான் பல்வேறு தோல்விகளை சந்தித்துள்ளேன் என்று டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்."