இந்தியா – இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் தடைபட்டு, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், போட்டி துவங்குவதற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையே மழை விட்ட நிலையில் பிச்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தொடர்ந்து தாமதம் ஆனது. பின் ஆடுகளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்து அதை காய வைக்கும் முயற்சிகள் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டனர்.
வாக்குவம் கிளீனர் வைத்தும் காய
வைக்க முடியாமல், அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க
முயற்சி நடைபெற்றது.
இதன் மூலமும் ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் , அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு போட்டியை நேரடியாக பார்க்கலாம் என்று அதிக ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் போட்டியை நடத்தும்போது இரவு 7 மணிக்கு போட்டியை நடத்துவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இருக்கலாம் என்பதே நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் கருத்தாக இருந்தது
இலங்கை கிரிக்கெட் அணியில், கேப்டன் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்காமலே கைவிடப்பட்டது.
தொடா்ந்து பிட்ச் ஈரத்தன்மையுடன் இருந்ததால், 9.30 மணிக்கு மூன்றாம் ஆய்வை நடுவா்கள் அறிவித்தனா். பிட்சை ஆய்வு செய்த பின் நடுவா்கள் ஆலோசனைக்காக திரும்பிச் சென்றதால்,
5 ஓவா்கள் ஆட்டத்துக்கு இறுதி நேரம் 9.45 மணி என்பதால் பரபரப்பு நிலவியது.
இதனை இனிமேலாவது பிசிசிஐ கவனத்தில்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் ஒரு சிலர் வன்முறையில் இறங்க முயற்சித்ததாகவும் ஆனால் போலீஸ் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Be the first to comment on "இந்தியா – இலங்கை முதல் டி20 மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது"