இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் உள்ளதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சாதிக்க எல்லா அணிகளும் தற்போது முதலே தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எல்லா அணிகலும் ஒருநாள் போட்டிகளை விட டி-20 போட்டிகளில் அதிகம் பங்கேற்கிறது.
கடந்த முறை டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் (2016) இந்தியாவில் நடந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்திய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபைனலில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கிடையில் கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஐசிசி தொடரான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மட்டும் சாதிக்க முடியவில்லை. கடைசியாக இந்திய அணி பங்கேற்ற இரண்டு ஐசிசி தொடர்களில் ஃபைனல் மற்றும் அரையிறுதி வரை சென்றுள்ளது.
ஐசிசி தொடரில் இந்திய அணி கடைசியாக கடந்த 2013இல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்று அசத்தியது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாரா கூறுகையில், “ இந்திய அணியைப் பொறுத்தவரையில் பங்கேற்கும் எல்லா தொடர்களிலும் சாதிக்கும் திறமை உள்ளது. இந்திய அணிக்கு எதிராக முக்கியமான போட்டிகளில் பங்கேற்கவே மற்ற அணிகள் தயாராகி வருகிறது. அனைத்து அணிகளின் இலக்காகவும் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்கும் திறமை கோலி அணிக்கு உள்ளது” என்றார்.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 400 என்பதுதான் உடைக்க முடியாத சாதனையாக இருக்கிறது. சமீபத்தில் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தார். ஆனால் அணியின் வெற்றியை கருதி டிம் பெய்ன் டிக்ளேர் செய்ததால் 335 நாட்அவுட் உடன் விடைபெற்றார்.
இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தால் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினமானது. அவர் சிறந்த வீரர்தான், ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த அவரால் விளையாட முடியாது. டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக முடியும்.
Be the first to comment on "உலககோப்பையை வெல்லும் தகுதி இந்தியா அணிக்கு மட்டுமே உள்ளது என லாரா புகழாரம்"