இந்திய தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 16 மாதத்திற்குப் பிறகு இடம் பிடித்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான மேத்யூஸ் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தொடருகிறார். பயிற்சியின் போது காயமடைந்த நுவான் பிரதீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா சேர்க்கப்பட்டார். ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் 16 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளார். 16 பேர் கொண்ட இலங்கை அணிக்கு, அந்த நாட்டு விளையாட்டு மந்திரி துலாஸ் அழகப்பெருமா நேற்று ஒப்புதல் வழங்கினார். இலங்கை வீரர்கள் இன்று இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள்.
அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.
லக்மால் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை அணியுடனும் பயணிக்கமாட்டார்.”
டெங்கு நோயின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், இலங்கை அணியில் இருந்து விலகியிருக்கின்றார்.
லக்மால் இல்லாமல் போயிருக்கும் காரணத்தினால் இலங்கை டெஸ்ட் அணியில் 22 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாந்துவிற்கு வாய்ப்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
மற்றும் இலங்கை அணிக்காக முன்னர் ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் மாத்திரம் விளையாடியிருக்கும் அசித்த பெர்னாந்து இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்காக அண்மையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லசித் மலிங்கா (கேப்டன்), 2. தனுஷ்கா குணதிலகா, 3. அவிஷ்கா பெர்னாண்டோ, 4. மேத்யூஸ், 5. தசுன் ஷனகா, 6. குசால் பெரேரா, 7. நிரோஷன் டிக்வெல்லா, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. இசுரு உதானா. 10. பனுகா ராஜபக்சே, 11. ஒஷாடாபெர்னாண்டோ, 12. ஹசரங்கா, 13. லஹிரு குமாரா, 14. குசால் மெண்டிஸ், 15. சண்டகன், 16. கசுன் ரஜிதா.
Be the first to comment on "இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு முக்கிய வீரர்களுக்கு அணியில் இடம் !!"