டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆகாஷ் சோப்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100203185

நியூ டெல்லி: சிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. குரூப் ஏ  பிரிவில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது வெற்றியை பதிவுசெய்தது.

நியூ யார்க் நகரில் நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதிலும் குறிப்பாக துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் பந்துவீச்சில் 4 ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நடந்து முடிநத் ஐபிஎல் 2024 தொடரில் சுமாராக விளையாடியதால் ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் எதிர்ப்புக்குள்ளான ஹர்திக் பாண்டியா தற்போது இந்தியாவுக்காக அசத்தத் துவங்கியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கிண்டலடித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த இந்திய ரசிகர்கள் தற்போது பாண்டியாவை பாராட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை மிகவும் வேகமாக மாறுவதாக தெரிவித்த அவர் இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “ ஐபிஎல் தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியாவுக்கு மக்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்த மைதானமும் “ஹர்திக் ஹர்திக்” என்று கூச்சலிட்டு அவரை வரவேற்றது. வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை பாருங்கள்.

நீங்கள் சிறப்பாக விளையாடினாலே போதும் உங்களை திட்டியவர்கள் கூட பாராட்டி உங்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வார்கள். இந்தியர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமிக்கவர்கள் என்பதை நான் இதன்மூலம் கற்றுக்கொண்டுள்ளேன். அதாவது 140 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கிரிக்கெட்டை பின்பற்றுபவர்கள் நீங்கள் யார் என்று தெரியாவிட்டாலும் கூட உங்களுடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்வார்கள். இதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்களை தனது பக்கம் திருப்பியுள்ளார்” இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆகாஷ் சோப்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*