மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29-ந்தேதி ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் என முக்கிய நபர் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான டி20 லீக்காக
ஐபிஎல் திகழ்கிறது. இந்த 10 ஆண்டுகளின் கடைசி தொடரான 2019-ல் மும்பை இந்தியன்ஸ்
சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும்,
முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன்
மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல்
வெளியாகியுள்ளது.
ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல்
மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக
விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச்
29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச்
31-ந்தேதிதான் முடிவடைகிறது. ஆரம்ப போட்டிகளில் இந்த அணிகளின் வீரர்கள் பங்கேற்க
முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிக பணத்தில் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் ஐபிஎல்லை துவக்குவது சரியாக இருக்காது என்றும் இதனால் ரசிகர்களும் ஏமாற்றமடைவார்கள் என்றும் இதையடுத்து ஐபிஎல் துவக்கத் தேதியை ஏப்ரல் 1க்கு மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் துவக்கம் முதலே வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தர வேண்டுமானால் தேதி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அணியினர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ளதாகவும் முதல் போட்டியை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கி வைக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற
ஐ.பி.எல். போட்டியில் ‘மன் கட்’ முறையில் எந்த பேட்ஸ் மேனை ரன் அவுட் செய்வீர்கள் என்று
ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அஸ்வின் கூறும்போது, எந்த பேட்ஸ்மேனாவது நான் பந்து
வீசும் போது கிரீசை விட்டு வெளியேறினால் ‘மன் கட்’ முறையில் ரன் அவுட் செய்வேன் என்று
பதில் அளித்தார்.
Be the first to comment on "மார்ச் மாதம் 29-ந்தேதி ஐபிஎல் 2020 சீசன் ஆரம்பம்"