டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவை ஒரே பக்கத்தில் கொண்டு வருமாறு பிசிசிஐக்கு ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100203162

மும்பை: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர் சஹால், ஷிவம் தூபே, அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ரன் ரேட் குறைவாக இருந்தபோதிலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடந்துமுடிந்த 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பெரும் தொகையை கொடுத்து வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஐபிஎல் 2024 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியது மட்டுமல்லாமல், ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கி, அவரை கேப்டனாகவும் நியமித்தது. இருப்பினும் ஐபிஎல் 2024இன் பிளேஆஃப் சுற்றில் மும்பை நுழையத் தவறியதால், பரபரப்பான தலைமை மாற்றம் திட்டமிடப்படவில்லை. ஹர்திக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப் பந்தயத்திலிருந்து முதல் அணியாக  வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவும் ரோஹித் சர்மாவும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்று புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,  “ஹர்திக் பாண்டியா நீல நிற ஜெர்சியை அணியும்போது, வித்தியாசமான ஹர்திக் பாண்டியாவாக இருப்பார். ஏனென்றால் அவரால் எந்தவொரு ரன்களை அடிக்கவும் முடியும், எப்படிப்பட்ட விக்கெட்டானாலும் வீழ்த்தவும் முடியும் என்று எங்களுக்குத் தெரியும். ஹர்திக் பல விஷயங்களை கடந்துவிட்டதால் அவர் நன்றாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவுக்காக அவர் ஒரு சிறந்த போட்டியை நடத்த வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இருப்பினும் அவருடைய ஃபார்ம் எனக்கு கொஞ்சம் கவலை அளிக்கிறது. ஏனனில் அவரைச்சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. குஜராத்தில் அணியிலிருந்து மும்பைக்கு இந்தியன்ஸ் அணிக்கு அவர் டிரேடிங் முறையில் மாறியதற்காக பலரும் சரியாக ரியாக்ட் செய்யவில்லை. அதுவும் அணியின் கேப்டனாக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேசமயம் அவர்கள் ஒரு அணியாக ஒன்றாக விளையாடவில்லை போல் தெரிகிறது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக ஹர்திக் சுதந்திரமாக இருக்கவில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் மட்டுமல்ல வெவ்வேறு அணிகளில் விளையாடிய பலரும் இந்திய அணிக்காக ஒன்றிணைய வேண்டும். ஐபிஎல் கோப்பையை வெல்வதை விட உலகக்கோப்பையை வெல்வதே மிகப்பெரிய சாதனையாகும். எனவே அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரே பக்கத்தில் வைத்து, அவர்கள் ஒன்றாக விளையாடுவதை உறுதிசெய்யுமாறு நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறுவது நிர்வாகத்தின் பொறுப்பு. அதேபோல தோற்றாலும் ஒன்றாகத்தான் தோற்றுப்போக வேண்டும்” இவ்வாறு ஹர்பஜன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவை ஒரே பக்கத்தில் கொண்டு வருமாறு பிசிசிஐக்கு ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*