சென்னை: நடப்பாண்டு நடந்துமுடிந்த 17ஆவது ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் கொல்கத்தா அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியதுடன், 2வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.
மேலும் கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு 10 வருடங்கள் கழித்து ஆலோசகராக வந்துள்ள கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஆனால் உண்மையாக களத்தில் இறங்கி அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி அணியின் கேப்டனாக அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வெற்றியின் நாயகனாக திகழ்கிறார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.
மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸை வரலாற்றிலேயே முதன்முறையாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் தற்போது கொல்கத்தா அணிக்காக முதல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று ராபின் உத்தப்பா அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காயத்தால் அவதிப்பட்ட வந்த போது அவரை இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து பிசிசிஐ நீக்கியதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் பின்னடைவை சந்தித்த அவர், அதையும் தாண்டி சாதித்துள்ளதாக உத்தப்பா பாராட்டியுள்ளார். ஆகையால் ஷுப்மன் கில் போன்ற இளம் வீரரை விட ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஜியோ சினிமா சேனலில் பேசிய அவர், “இதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர் இந்திய அணியின் வருங்கால கேப்டன். ஷுப்மன் கில்லுக்கு முன்பாக அவர் அடுத்த கேப்டன் பதிவுக்கான வரிசையில் நிற்கிறார். அதுமட்டுமின்றி அவர் அணியை நிர்வகிப்பதில் அபார திறமையை கொண்டுள்ளார். நடந்துமுடிந்த ஐபிஎல் சீசனில் அவர் நிறைய கற்றிருப்பார் என்று நினைக்கிறேன். அதேசமயம் கௌதம் கம்பீர், சந்திரகாந்த் பண்டிட், அபிஷேக் நாயர் ஆகிய 3 வலுவான நபர்களுடன் வேலை செய்துள்ளார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதிலும் உங்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி சரியான முடிவுகளை எடுப்பது கடினமாகும். ஆனால் அவர் அதை அதிரடியாக செய்தார். இது அவருடைய குணாதிசயத்தை பற்றி மட்டுமல்லாமல் அபாரமான திறமை மற்றும் நம்பிக்கையையும் தெரிவிக்கிறது. எனவே அடுத்த இந்திய அணயின் கேப்டனுக்கான உரையாடலில் அவர் சரியான இடத்தில் தன்னை அமைத்துக் கொண்டுள்ளார் என்ற உண்மையை நான் நம்புகிறேன்.
குறிப்பாக காயத்தை சந்தித்தது, உலகக்கோப்பையில் இருந்து கழற்றி விடப்பட்டது, பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இடம் கிடைக்காதது போன்ற அம்சங்களால் அவர் நிறைய பின்னடைவுகளை சந்தித்தார். இருப்பினும் அவர் அதுகுறித்து அரிதாகவே பேசினார். இது தனக்காகவும் அணிக்காகவும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஆகையால் இது ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வளர்வதற்கான சரியான துவக்கம் என்று நினைக்கிறேன்” இவ்வாறு உத்தப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
I loved as much as you will receive carried out right here The sketch is attractive your authored material stylish nonetheless you command get got an impatience over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike