ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று முன்தினம் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்டுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதில் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறிய பெங்களூரு அணி தற்போது கடுமையான கிண்டல்களை சந்தித்து வருகிறது. ஏனெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடுமையாக போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனின் தொடக்கம் முதலே தடுமாறியதுடன், தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவுசெய்தது. இதன்காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்திருந்த பெங்களூரு அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் விளையாடிய 6 போட்டிகளில் 6 வெற்றிகளையும் பதிவுசெய்து கம்பேக் கொடுத்தது ஆர்சிபி அணி. குறிப்பாக நடந்துமுடிந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி தகுதிபெற்றது. ஆனால் அச்சமயம் சிஎஸ்கே அணியை நாக் அவுட் செய்த வெற்றியை கோப்பையை வென்றது போல் ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர்.
குறிப்பாக சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களிடம் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு விராட் கோலி மிரட்டினார். அதேசமயம் களத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் கலாய்த்து வெறித்தனமாக கொண்டாடினர். அதன் உச்சமாக சில சிஎஸ்கே பெண் ரசிகைகளிடம் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோக்களும் வைரலாகின.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றிபெற்ற பின் ஆர்சிபி அணியினர் ஜென்டில்மேனாக சென்றிருக்க வேண்டும். அதை விடுத்து அதிகமாக கொண்டாடியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்காக தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்று ஆர்சிபியை தோற்கடித்துள்ளார் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “வாழ்வில் நீங்கள் சிறப்பாக செயல்படும் போது வாயை மூடிக்கொண்டு தொடர்ந்து நன்றாக செயல்பட வேண்டும். அதை விடுத்து ஏதோ ஒன்றிற்காக தேவையில்லாமல் சத்தம் போட்டால் உங்களால் அந்த வேலையை செய்ய முடியாது. சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றிபெற்ற பின் ஆர்சிபி அணி தேவையற்ற வீடியோக்களை போட்டு தேவையற்ற விஷயங்களை செய்தனர். இதன்காரணமாகவே ரவிச்சந்திரன் அஸ்வினிடம் அவர்கள் தோல்வியைத் தழுவினர்.
ஆகையால் கிரிக்கெட் விளையாடும் போது நீங்கள் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும். நீங்கள் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டால் அதற்கான வாழத்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் சுமாராக விளையாடினால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் வாயை திறந்து ஆக்ரோசத்தை காட்டக்கூடாது. மற்ற அணியினர் தங்களுக்கு தாங்களே கம்பேக் கொடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். அதை சிஎஸ்கே மற்றும் மும்பை அணி வீரர்கள் பலமுறை செய்து கோப்பைகளையே வென்றுள்ளனர். ஆனால் ஆர்சிபி அணி வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வென்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தற்போது வெளியேறியுள்ளனர்” இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
I do believe all the ideas youve presented for your post They are really convincing and will certainly work Nonetheless the posts are too short for novices May just you please lengthen them a little from subsequent time Thanks for the post