விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020-ல் விளையாடும் சுற்றுப் பயண விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 2019 வருடத்தை சிறப்பாக முடித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் இந்தியா ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பின் மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பிறகு மார்ச் 28-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
ஆஸி. மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது கோலி தலைமையிலான இந்திய அணி.
2018 ஆண்டின் டெஸ்ட், ஒரு நாள் அணிகளின் கேப்டனாக விராட் கோலியின் பெயரைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது ஐசிசி.
ஐபிஎல்-லில் சிஎஸ்கேவை வீழ்த்தி மீண்டும் சாதித்த மும்பை இந்தியன்ஸ் அணி. உலகக் கோப்பை: அரையிறுதி வரை நுழைந்த இந்திய அணி.
கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் பங்கேற்றுள்ளது.
2010 முதல் 2019 வரையிலான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.
Be the first to comment on "2020 இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் அட்டவணை"