அஹ்மதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் -மயங்க் அகர்வால் ஜோடியில் மயங்க் அகர்வால் 16(13) ரன்கள் எடுத்த அஸ்மத்துல்லா ஒமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெண்ட்டும் 19(14) ரன்களுடன் நூர் அஹ்மத் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29(20) ரன்களுடன் மோஹித் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம் -ஹென்ரிச் கிளாசென் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24(13) ரன்களுக்கு ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரமும் 17(19)ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஷபாஸ் அஹ்மத் -அப்துல் சமத் ஆகியோரும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினர். இறுதியில் அதிரடி காட்டிய ஷபாஸ் அஹ்மத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 22(20) ரன்களுடனும், அடுத்துவந்த வாஷிங்டன் சுந்தர் ரன்கள் ஏதுமின்றியும் மோஹித் ஷர்மாவின் அடுத்தடுத்த பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29(14) ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்த அப்துல் சமத் ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான விருத்திமான் சஹா -ஷுப்மன் கில் ஜோடியில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா ஒரு பவுண்டரி, 2 சிக்சர் என 25(13) ரன்கள் சேர்த்து ஷபாஸ் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில்லும் 36(28) ரன்களுக்கு மயங்க் மார்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்ஷன் -டேவிட் மில்லர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45(36) ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் டேவிட் மில்லர் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 44(27) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க, அவருக்கு துணையாக விஜய் சங்கரும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 14 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் குஜராத் அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
I do not even know how I ended up here but I thought this post was great I do not know who you are but certainly youre going to a famous blogger if you are not already Cheers
Simply wish to say your article is as amazing The clearness in your post is just nice and i could assume youre an expert on this subject Well with your permission let me to grab your feed to keep updated with forthcoming post Thanks a million and please carry on the gratifying work