ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடர், முதல்நாளில் முடிவில் 257 ரன்கள்

லாபஸ்சாக்னே, ஸ்மித் அரைசதம் அடித்தாலும் நிதானமான ஆட்டத்தால் முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களே சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) இன்று தொடங்கியது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று ஆஸ்திரேலியாவை முதலில் ஆட அழைத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் 4-வது பந்தில் ஜோ பேர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன்  மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

என்றாலும், நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. வார்னர் 41 ரன்னில் வாக்னர் பந்தில் அவுட் ஆனார். 64 பந்தில் 3 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஆஸ்திரேலியா 61 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.

அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். லாபஸ்சாக்னே – ஸ்மித் ஜோடியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. மற்றும் அதேவேளையில் லாபஸ்சாக்னே – ஸ்மித் ஜோடியால் விரைவாக ரன்களும் குவிக்க இயலவில்லை.

லாபஸ்சாக்னே 132 பந்தில் அரைசதம் அடித்தார். லாபஸ்சாக்னே தொடர்ச்சியாக 4-வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 63 ரன்னில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். மற்றும் லாபஸ்சாக்னே நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 143 ரன்னும், மற்றும் அதற்கு முன்னதாக பாகிஸ்தான் டெஸ்டில் 162 ரன்னும், 185 ரன்னும் எடுத்து இருந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக ஆடி 103 பந்தில் அரைசதத்தை தொட்டார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா முதல்நாளில் 90 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

மற்றும் சராசரி 2.85 ஆகும். ஆஸ்திரேலியாவின் மந்தமான ஆட்டத்தில் இதுவும் ஒன்று. ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஸ்மித் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

19.1 ஓவரில் அரைசதத்தை தொட்ட ஆஸ்திரேலியா 40.1 ஓவரில் 100 ரன்னையும், 68.5 ஓவரில் 200 ரன்னையும் தொட்டது.

Be the first to comment on "ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடர், முதல்நாளில் முடிவில் 257 ரன்கள்"

Leave a comment

Your email address will not be published.


*