2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்காக தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-1005527
Indian players celebrates the wicket of Beth Mooney of Australia during the second T20I between India and Australia held at the DY Patil Stadium, Navi Mumbai on the 7th January 2024 Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

பெங்களூர்: பெண்களுக்கான ஐ.பி.எல். எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின. மேலும் முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதனையடுத்து டபிள்யூ.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை பெங்களூர் மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் கடந்த முறை, எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், மந்தனா, சோஃபி டிவைன், மேகன் ஷட் மற்றும் ரேணுகா தாக்கூர் போன்ற பெரிய வீராங்கனைகள் அணியில் இருந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவர்கள் விளையாடிய எட்டு போட்டிகளில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இந்நிலையில் நடப்பாண்டு சீசன் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில் “இந்த சீசன் முதல் சீசனை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் அணியிலிருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேசமயம் நாங்கள் புதிய வீரர்களையும் வாங்கியுள்ளோம். இதன்காரணமாக கடந்த சீசனை விட இந்த சீசனில் அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக, நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்ப இந்த முறை செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த ஆண்டு, நாங்கள் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் அணியில் இணைந்தோம். அதனால் மற்ற வீராங்கனைகளை பற்றிய 90 சதவீதம் எங்களுக்கு தெரியாது. நடப்பாண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும்.

எங்கள் அணியின் உரிமையாளர்கள் மிகவும் நல்லவர்கள் .எங்களை பெரிதும் ஆதரித்துள்ளனர்.  அவர்களுக்காக இந்த முறை கோப்பையை வெல்ல விரும்புகிறோம். ஏனெனில் கடந்த சீசனில் நான்கு தோல்விகளுக்குப் பிறகும் அவர்கள் எங்களை ஆதரித்த விதமும், உரையாடலும் எங்கள் நல்வாழ்வைச் சுற்றியே இருந்தது. எனவே, வீரர்களாக எங்களுக்கு கிடைக்கும் இந்த ஆதரவை மதித்து, கடந்த சீசனில் எங்களை ஆதரித்த ரசிகர்களுக்காகவும் கோப்பையை வெல்ல முயற்சிப்பது மிகவும் முக்கியம்.

என்னுடைய தனிப்பட்ட இலக்கை பொறுத்த வரை கடந்த சீசனில் நான் எதிர்பார்த்த சிறப்பான செயல்திறனை என்னால் வழங்க முடியவில்லை. இந்த முறை, கடந்த ஆண்டு செய்த தவறுகளை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை. எங்கள் அணியின் பேட்டிங் வரிசை தற்போது நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக இந்த முறை வீராங்கனைகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இந்த முறை நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” இவ்வாறு ஸ்மிருதி மந்தனா செய்தியாளர்களிடம் கூறினார்.

Be the first to comment on "2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்காக தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*