இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி முற்றிலுமாக விலகியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-1005223
Virat Kohli of India during the India practice session and Press conference held at the M. Chinnaswamy Stadium, Bangalore on the 16th Jan 2024 Photo by Saikat Das / Sportzpics for BCCI

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களால் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி விலகுவது உறுதியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்றும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே விராட் கோலி இல்லாமல் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தொடரின் அனைத்து போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக வெளியான தகவல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ள பி.சி.சி.ஐ, “நாங்கள் விராட் கோலியின் பிரைவசியை  மதிக்கிறோம். எங்களிடம் முறைப்படி தனது தனிப்பட்ட முடிவை தெரிவித்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விடுப்பினை எடுத்துள்ளார். எனவே நாங்கள் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒரே ஒரு விஷயம் தான். விராட் கோலி விலகல் குறித்து எந்த ஒரு வதந்தியையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாம். அவரது முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியம். எனவே அவரது சொந்த விஷயத்தில் யாரும் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம்” இவ்வாறு பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல்.ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவது உறுதியகியுள்ளது. அவரைத்தவிர சர்ஃப்ராஸ் கான், ராஜத் பட்டிதார் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில்  சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பணிச்சுமை காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி முற்றிலுமாக விலகியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*