80 பின்தங்கிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் மலைக்க வைக்கும் வகையில் விளையாடியது. டாப்-4 வீரர்களான ஷான் மசூத், அபித் அலி, கேப்டன் அசார் அலி, பாபர் அசாம் ஆகியோரது சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 212 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வெறும் 16 பந்துகளில் பறிகொடுத்தது. எம்புல்டெனியா (0), ஒஷாடா பெர்னாண்டோ (102 ரன்), விஷ்வா பெர்னாண்டோ (0) வரிசையாக வீழ்ந்தனர்.
இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 62.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.
80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களான ஷான் மசூத், அபித் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தனர். ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்சில் தடுமாறிய நான்கு வீரர்களும் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தனர். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (122), ராகுல் டிராவிட் (129), வாசிம் ஜாபர் (138), தினேஷ் கார்த்திக் (129) வங்காள தேசம் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "2-வது டெஸ்டில் இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றி, பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி"