நியூ டெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் இரு அணிகளின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இத்தொடரின் முழு டெஸ்ட் அணியையும் அறிவிக்காமல் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ‘பாஸ்பால்’ அணுகுமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய வீரர்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வியாழக்கிழமையன்று ஹைதராபாத்தில் தொடங்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பின்வாங்காது. ஏனெனில் தொடரின் போது உருவாகும் சூழ்நிலைகளின் அடிப்படைக்கு ஏற்ப இந்திய அணி தங்கள் விளையாட்டுத் திட்டங்களை மாற்றியமைக்கும் ” என்று டிராவிட் உறுதிப்படுத்தினார்
மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், “இங்கிலாந்து அணி அல்ட்ரா-அட்டாக் செய்ய முயற்சிப்பதற்காக நாங்கள் வெளியே செல்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களுக்கு முன்னாள் என்ன இருக்கிறது, சூழ்நிலை என்ன கோருகிறது என்பதில் கவனம் கொண்டு அதற்கேற்ப நாங்கள் விளையாடுவோம். இருப்பினும் இயல்பாவகவே எங்கள் அணியின் டாப் ஆர்டரில் களமிறங்கும் முதல் ஆறு-ஏழு பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது, இயற்கையாகவே ஆட்டத்தை நேர்மறையாக எடுத்துச் செல்ல இங்கு பல வீரர்கள் உள்ளனர்.
ஆகையால் அவர்கள் எந்த குறிப்பிட்ட வகையையும் மாற்றப் போவதில்லை. ஒருவேளை ஆட்டத்தில் சில வித்தியாசமான சூழ்நிலைகள் இருக்கும்போது, நாம் விளையாட்டைத் தொடர வேண்டும் அல்லது நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் எவரும் பின் வாங்குவதையோ அல்லது தற்காப்புக்கு ஆளாவதையோ என்னால் பார்க்கமுடியாது. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் என்பதில் எள் அளவும் எனக்கு சந்தேகம் இல்லை.
இத்தொடர் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனென்றால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். இருப்பினும் எங்கள் வீரர்கள் அவர்களின் ஆட்டத்திற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருப்பதால், இங்கிலாந்துக்கு ஏதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். அதேசமயம் கிளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் எப்படி இத்தொடரில் செயல்பட போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்” இவ்வாறு ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்"