டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100350011
Washington Sundar of India celebrating the wicket of Azmatullah Omarzai of Afghanistan during the 3rd T20I between India and Afghanistan held at the M. Chinnaswamy Stadium, Bangalore on the 17th January 2024 Photo by Saikat Das / Sportzpics for BCCI

பெங்களூர்: நடப்பாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதன்காரணமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பல்வேறு அணிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் தனது கடைசி டி20 தொடரை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி முடித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 14 மாதங்கள் இடைவெளிக்குப் பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதேசமயம் இத்தொடரில் கேப்டனாவும் ரோஹித் ஷர்மா அசத்தியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பின், டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட மாட்டார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராகியுள்ளனர். இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னை பொறுத்தவரை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி தான் மிகப்பெரிய ஏமாற்றம். ஏனெனில் நான் ஒருநாள் போட்டிகளை பார்த்து தான் வளர்ந்துருக்கிறேன்.

ஆனால் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, இன்னொரு பெரிய கோப்பைக்கான தொடர் நடப்பாண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இம்முறை நாங்கள் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல முயற்சிப்போம். அதற்காக கடந்த 2 ஆண்டுகளாகவே ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களை பயிற்சி செய்து வருகிறேன். ஏனெனில் இந்த போட்டியில் பந்து கொஞ்சம் ஸ்பின்னாவதை அறிந்த பின், அந்த ஷாட்களை விளையாடினேன். டி20 கிரிக்கெட்டில் எப்போதும் வாய்ப்புகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை 15 பேர் கொண்ட இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை. எங்களின் திட்டத்தில் 8 முதல் 10 வீரர்கள் தான் இருக்கிறார்கள். ஆகையால் சூழலுக்கு ஏற்ப இந்திய அணியின் காம்பினேஷன் முடிவு செய்யப்படும். அதற்கேற்ப வீரர்களின் தேர்வும் இருக்கும். மேற்கிந்தியத் தீவுகளின் மைதானங்கள் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும். அதனை மனதில் கொண்டு தான் இந்திய அணி தேர்வு இருக்கும்” இவ்வாறு ரோஹித் ஷராமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*