வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை உறுதிசெய்ய இந்திய மகளிர் அணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்

www.indcricketnews.com-indian-cricket-news-10050226
Saika Ishaque of India bowls during the India Women’s Practice session and press conference held at the Wankhede Stadium in Mumbai ahead of the 1st test match with Australia Women on the 20th December 2023. Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

மும்பை: 1995 முதல் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் கடந்த வாரம் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி அதே வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

 46 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 10 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறைகூட வெற்றிபெறாத இந்திய அணி, தற்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற களத்தில் விளையாடி வருவதால், அதைச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பு வியாழக்கிழமையான இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுவது தான் என்பதை அறிந்திருக்கும்.

இந்திய பந்துவீச்சாளர்களில், குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் தீப்தி ஷர்மா, கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல ஆஸ்திரேலியர்களுக்கு எதிராகவும் அந்த அனல் பறக்கும் தொடரை தொடருவோம் என்ற நம்பிக்கையுடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கவுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமையான நேற்று செய்தியாளர்களுடனான சந்நிப்பில் பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சில வீரர்களின் பணிச்சுமையைக் கண்காணிப்பதில் அணி நிர்வாகம் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசுகையில், “பேக்-டு-பேக் டெஸ்ட் போட்டிகளை விளையாடும்போது, ​​நீங்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான விஷயம். கடைசி டெஸ்டில் அதிக பேட்டிங் மற்றும் பௌலிங், ஓய்வு பெறாத தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் போன்ற வீராங்கனைளின் பணிச்சுமையை நாங்கள் கவனித்து வருகிறோம். ஏனெனில் அடுத்த ஆட்டத்திற்குத் தயாராக இருக்கும் அளவுக்கு அவர்கள் பயிற்சிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதே சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் அடிக்கடி பேசுவோம். அதற்காக எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இந்த நேரத்தில், நமக்குள் இருக்கும் உற்சாகம்தான் மிக முக்கியமான விஷயம். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அரிது என்பதால், உற்சாகம் உண்மையில் எங்களை மீட்க உதவுகிறது. ஆஸ்திரேலியா மகளிர் அணி மிகவும் சிறந்த அணி என்பது நம் அனைவருக்கும் தெரியும். எந்தவொரு அணியாக இருந்தாலும் அவர்களை வெல்ல தான் விரும்புவார்கள்.

அவர்களிடம் அதிகமான ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் தொடர்ந்து பங்களிக்கின்றனர். ஆனால் அவர்கள் போட்டிகளை வெல்வதற்கு ஒருவரை மட்டும் சார்ந்திருக்க மாட்டார்கள். மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது அவர்கள் வித்தியாசமாக இருப்பதாக நான் உணர ஒரே காரணம் ஆஸ்திரேலிய அணியில், நீண்ட காலமாக, அனைவரும் தங்களுடைய பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள்.  அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளம். ஒருவர் தனது சொந்த அணியிலிருந்து மட்டுமல்ல, எதிரிகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். இவைதான் சிறந்தவை என்று நான் கருதுகிறேன்” இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை உறுதிசெய்ய இந்திய மகளிர் அணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*