மழை காரணமாக இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10050199
GQEBERHA, SOUTH AFRICA - DECEMBER 12: Rinku Singh and Suryakumar Yadav (c) of India during the 2nd KFC T20 International match between South Africa and India at St George’s Park on December 12, 2023 in Gqeberha, South Africa. (Photo by Richard Huggard/Gallo Images)

க்கெபர்ஹா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின்  இரண்டாவது போட்டி நேற்று   க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வா -ஷுப்மன் கில் ஜோடியில் ஜெய்ஸ்வால் மார்கோ ஜான்சன் பந்துவீச்சிலும், கில் லிசாட் வில்லியம்ஸ் பந்துவீச்சிலும் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா -சூர்யகுமார் யாதவ் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் அதிரடியாக விளையாட முற்பட்ட திலக் வர்மா 29(20) ரன்கள் எடுத்தபோது ஜெரால்ட் கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரிங்கு சிங் முதல் பந்திலிருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதேசமயம் மறுமுனையில் அரைசதம் விளாசிய கேப்டன் சூர்யகுமார் 56(36) ரன்கள் எடுத்ததிருந்த நிலையில் டப்ராயிஸ் ஷாம்சியிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜித்தேஷ் சர்மா 1(3) ரன்னுடன் ஐடன் மார்க்ரம் பந்துவீச்சில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் தனது பங்கிற்கு 19(14) ரன்கள் எடுத்து ஜெரால்ட் கோட்ஸிவிடம் ஆடட்மிழக்க, அடுத்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றி அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டு இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ரிங்கு சிங் 68(39) ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ரீஸா ஹென்றிக்ஸ் -மேத்யூ ப்ரீட்ஸ்கீ ஜோடியில் அதிரடியாக விளையாடிய ப்ரீட்ஸ்கீ 16(7) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்துவந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் தனது பங்கிற்கு 30(17) ரன்களைச் சேர்த்து முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 49(27) ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 7(5) ரன்களோடு முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.  

அதன்பின் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் மில்லரும் 17(12) ரன்கள் எடுத்து முகேஷ் குமாரிடம் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் தேவை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – பெஹ்லுக்வாயோ ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

Be the first to comment on "மழை காரணமாக இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*