மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. டிசம்பர்6ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இத்தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. மேலும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடந்துமுடிந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்தியா மகளிர் அணிக்கு இதுவரை டி20 தொடர் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.
ஆனால் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி தனது சொந்த மண்ணில் இலங்கையிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இதுவரை மோசமான சாதனையை கொண்டுள்ளது. ஏனெனில் கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 2018இல் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வீழ்த்திய இந்திய மகளிர் அணி, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒன்பது போட்டிகளில் இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இதுவரை 27 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி, அதில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றியைக் கைப்பற்றியுள்ளது. எனவே இந்தமுறை நிச்சயம் இந்திய மகளிர் அணி டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அனைவரும் நம்புகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 50 டி20 போட்டிகளில் 30 தோல்விகள் மற்றும் ஒரு டை ஆட்டத்துடன் 19 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு, இந்த தொடர் தனது சொந்த மண்ணில் ஒட்டுமொத்த சாதனையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற இந்தியாவிற்கு இந்தத் தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பட்டீல்,மன்னட் காஷ்யப், சாய்கா இஷாக், ரேணுகா சிங் தாக்குர், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர், கனிகா அகுஜா, மின்னு
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றனர்."