இரண்டாவது டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10050067
India’s Ravi Bishnoi celebrates the wicket of Australia's Tim David during the second T20 International between India and Australia held at the Greenfield International Stadium - Thiruvananthapuram on the 26th November 2023 Photo by: Deepak Malik / Sportzpics for BCCI

திருவனந்தபுரம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய ஜெய்ஸ்வால் 53(25) ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் தனது பங்கிற்கு சிக்சர்களை பறக்கவிட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் 52(32) ரன்கள் எடுத்தபோது மார்கஸ் ஸ்டோயின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் நிதானமாக விளையாடிவந்த கெய்வாட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19(10) ரன்கள் மட்டுமே எடுத்து நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இறுதியில் கெய்வாட்டும் 58(43) ரன்கள் எடுதத்போது நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரிங்கு சிங்  வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 31(9) ரன்கள் எடுத்து அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் -மேத்யூ ஷார்ட் ஜோடியில் ஷார்ட் 19(10) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜோஷ் இங்கிலிஸ் 2(4) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் 12(8) ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 19(16) ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்-டிம் டேவிட் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது டிம் டேவிட் 37(22) ரன்களுக்கும், ஸ்டொய்னிஸ் 45(25) ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மேத்யூ வேட் ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுபுறம் களமிறங்கிய சீன் அபோட், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் இறுதிவரை போராடிய மேத்யூ வேட் 42(23) ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய், பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்,அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Be the first to comment on "இரண்டாவது டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*