இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி  விளையாடினால் அது பிளாக்பஸ்டர் அரையிறுதியாக இருக்கும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034986

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் தொடரின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இதுவரை நடைபெற்ற அனைத்து லீக் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக புள்ளிப்பட்டியலில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்து இந்தியாவுடன் மோதபபோகும் அணி யார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் அந்த ஒரு இடத்தை பிடிப்பதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவி வருகின்றன. இருப்பினும் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானை விட நியூசிலாந்து அணி அதிக ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக அந்த அணிக்கே சற்று அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக நியூசிலாந்து அணி தங்களுடைய கடைசி போட்டியில் இலங்கையை தோற்கடித்தால் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதிபெறலாம் என்ற நிலைமையில் இருக்கிறது. அதேசமயம் மறுமுனையில் இலங்கையிடம் நியூசிலாந்து அணி தோல்வியுற்று, பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசிப்போட்டியில் இங்கிலாந்தை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் இந்தியாவுடன் அரையிறுதியில் விளையாடலாம் என்ற நிலைமையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய சொந்த ஊரான கொல்கத்தாவில் இந்தியா விளையாடுவதை பார்க்க விரும்புவதால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கௌரவ கங்குலி தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியா ஒருநாள் தொடரை நடத்தும் நாடாக இருப்பதால் தங்களுடைய அரையிறுதி போட்டியை விளையாட மும்பை அல்லது கொல்கத்தா ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு நகரத்தை தேர்வு செய்யும் உரிமையை கொண்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக மும்பைக்கு பதில் கொல்கத்தாவில் விளையாட விரும்புகிறோம் என்று ஐசிசியிடம் அந்நாட்டு வாரியம் ஸ்பெஷல் அனுமதியை வாங்கியுள்ளது. ஆகையால் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒரு அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றால், அப்போட்டி மும்பையில் நடைபெறும் என்பதால் பாகிஸ்தான் வரவேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “நான் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் வரவேண்டும் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்தியா –பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதி போட்டி தான் உங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும். மேலும் கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. அவர் கொல்கத்தாவில் 49ஆவது ஒருநாள் சதமடித்ததை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நடப்பு தொடரில் சதமடிக்க நெருங்கியும் தவற விட்ட அவர் கொல்கத்தாவில் விளாசினார். இருப்பினும் இதுவரை தொடர்ச்சியாக வென்று வரும் இந்திய அணி, இதேபோல கடைசிவரை விளையாடி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்” இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி  விளையாடினால் அது பிளாக்பஸ்டர் அரையிறுதியாக இருக்கும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*