நியூ டெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதிலும் குறிப்பாக ஒருநாள் தொடரில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலி, இப்போட்டியில் தன்னுடைய 49ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்ததுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையையும் சமன் செய்து, ஏற்கனவே புகழ்பெற்ற தனது கிரீடத்தில் மற்றுமொரு இறகைச் சேர்த்தார்.
தனது 35வது பிறந்தநாளில் ரசிகர்களால் நிரம்பி வழிந்த கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தை மகிழ்வித்த ரன் மெஷின் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து 121 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து எட்டாவது தொடர் வெற்றிபெற வழிவகுத்தார்.
கோஹ்லி சாதனை படைத்த அதேவேளையில், பிரீமியர் பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது அற்புதமான அரைசதத்துடன் மீண்டும் சிறந்த வடிவத்தை பெற்றார். சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சதங்களின் சாதனையை கோஹ்லி சமன் செய்த ஒரு போட்டியில், மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 77 ரன்களை விளாசி அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்த ஜோடியின் மகத்தான பங்கை பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் பேட்டர் கவுதம் கம்பீர்,” கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் அமைத்த பார்ட்னர்ஷிப் வேறு கிரகத்தில் பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன். ஆறு ஓவர்களுக்குள் தொடக்க விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை விட இவர்கள் இருவரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இன்னிங்க்ஸ் முழுவதும் எளியையாக இருக்க இந்த லீக் போட்டி நடைபெற்ற இடம் வான்கடே மைதானமோ, டெல்லி மைதானமோ இல்லை. இந்த மைதானத்தில் தொடக்கம் எளிதாக இருந்தாலும், நடுவிலும் முடிவிலும் சற்று கடினமாக இருக்கும். அதனால்தான் நான் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை விட இவர்கள் இருவரும் அதிகம் பாராட்டப்பட வேண்டும் என்று நம்புகிறேன்.
இந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். கேசவ் மகாராஜுக்கு எதிராக இவர்கள் இருவரும் பேட்டிங் செய்த விதம் அபாரமானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த மாகாராஜ ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அதன்காரணமாகவே தென்னாப்பிரிக்க அணி அவர்களின் கப்பந்துவீச்சாளர்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது” இவ்வாறு கம்பீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "ரோஹித் மற்றும் கில் ஆகியோரை விட இவர்கள் இருவரை தான் பாராட்ட வேண்டும் என்று கவதம் கம்பீர் தெரிவித்துள்ளார்."