சிராஜுக்கு பதிலாக ஷமி அணியில் இடம் பெறலாம் என முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034957

நியூ டெல்லி: ஐசிசி 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி  இதுவரை பங்கேற்று விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் ஜொலித்து வருகிறது. உலகக்கோப்பையில் தொடர்ந்து  சாதனையைத் தக்கவைக்க, அக்டோபர் 19ஆம் தேதியான இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கவுள்ளனர்.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இந்த லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை மீண்டும் ஆடும் லெவன் அணியில் சேர்த்ததைத் தவிர, மாற்றமில்லாத பதினொறு பேர் கொண்ட அணியை பெயரிடுவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

இருப்பினும் இந்தியாவுக்காக இதுவரை 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 33வயதான மூத்த வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக உலகக்கோப்பையில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி உலகக்கோப்பை தொடங்கும் முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தும் அவர் வெளியில் அமர்ந்துள்ளார்.

ஏனெனில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். அதேநேரத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சிறப்பாக விளையாடுகிறார். இதன்காரணமாக ஷமிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது. தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு நான்காவது வேகப்பந்து னவீச்சாளராக உள்ளார். ஒருவேளை ஸ்பின் டிராக் இருந்தால் ஷர்துலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல ஸ்ரேயாஸ் ஐயர் உடல்தகுதியுடன் சிறப்பாக செயல்படுவதால், சூர்யகுமார் யாதவ் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான மோதலில் அணியில் மாற்றம் செய்ய இந்தியா தயாராகுமா?என்ற கேள்விக்கு முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்துள்ளார்.

அதேசமயம் உலகக்கோப்பையில் இந்தியா எப்போது ஆடும் லெவன் அணியில் முகமது ஷமியை சேர்க்கலாம் என்றும் விளக்கியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் அஸ்வினும், டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷர்துல் தாகூரும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டனர்.

மாற்றீடுகள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளன. எனவே இந்திய அணி நிர்வாகம் சிராஜுக்கு ஓய்வு கொடுக்க நினைத்தால் ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். தேவைப்பட்டால் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக சூர்யக்குமார் யாதவை அணியில் சேர்க்கலாம். ஏற்கனவே ஷுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக இருக்கிறார். அதேபோல பிளாட் டெக் என்றால் ஷர்துல் தாகூர் விளையாடுவார். மாற்றம் வேண்டுமென்றால் அவருக்குப் பதிலாக அஸ்வின் களளிறங்குவார்” இவ்வாறு முன்னாள் தலைமை தேர்வாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "சிராஜுக்கு பதிலாக ஷமி அணியில் இடம் பெறலாம் என முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*