டெல்லி: 2023 உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 86(63) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஆனால் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஸ்ரேயாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார.
இதன்மூலம் இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 8ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ரோஹித் ஷர்மாவுக்கு முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இருப்பினும் அக்டோபர் 11ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 9ஆவது லீக் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் தனது சர்வதேச ஒருநாள் போட்டியின் 31ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குறைந்த ஸ்கோரில் சதம் அடிக்காததால் ரோஹித் ஷர்மா ஏமாற்றமடைந்துள்ளதாக ஆஷிஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “உங்களுடைய இலக்கு வெறும் 191 ரன்களாக இருக்கும் போது, முதல் 5-7 ஓவர்களில் நீங்கள் அடிக்கவில்லை என்றால், அது எப்போதும் கடினமாக இருக்கும். ஏனெனில் முதல் இரண்டு ஓவர்களில் இந்திய பேட்டர்கள் தொடங்கிய விதம், இந்திய அணியின் வெற்றியை பின்னுக்கு தள்ளியது. அதேசமயம் ரோஹித் ஷர்மாவும் சதமடிக்காமல் ஏமாற்றமளித்தார். ஆனால் திரும்பி வருவதற்கான வாய்ப்பைப் பற்றி சிந்திக்கக்கூட அவர் எதிரணி வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை” இவ்வாறு நெஹ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக், ஃபார்மில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் விளையாட்டுத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இதில்,”ரோஹித்திடம் ஷார்ட் பவுலிங் செய்யும் பாகிஸ்தானின் தந்திரம் புரியவில்லை. அவர் ஒற்றைப்படை சந்தர்ப்பங்களில் புல் ஷாட் விளையாடி அவுட்டானார். இருப்பினும் அது அவரை பெரிதாக பாதிக்கவில்லை. இந்த மைதானத்தில் அவர் ஒருபோதும் சிரமப்பட மாட்டார். அவர் அத்தகைய ஃபார்மில் இருக்கும்போது, ஒரு புல் ஷாட்டை தவறாக டைம் செய்வது மிகவும் அரிது” என்று சேவாக் கூறியுள்ளார்.
Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ரோஹித் ஷர்மா குறித்து நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்."