பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. 10 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் நிதானமாக பேட்டிங் செய்த இலங்கை அணி
ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் கருணரத்னே, ஒஷதா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். கருணரத்னே 59 ரன், ஒஷதா 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 10, சண்டிமால் 2, ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன் எடுத்து வெளியேறினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது. மழை காரணமாக நேற்று 68.1 ஓவர் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிசில்வா 38, டிக்வெல்லா 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாக். நசீம் ஷா 2, அப்பாஸ், அப்ரிடி, ஷின்வாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
68.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் கருணாரத்னே 59 ரன்களும், பெர்னாண்டோ 40 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக நடந்து முடிந்த போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
தனஞ்செயா டி சில்வா 38 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது. இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் திமுத் கருணரத்னே, ஒஷாடா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 96 ஆக இருக்கும்போது திமுத் கருணரத்னே 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 2 ரன்னிலும் வெளியேறினர். தனஞ்செயா டி சில்வா 38 ரன்னும், டிக்வெலா 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்"