மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவார்களா? என்பது குறித்து ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034875

பார்படாஸ்: கடந்த சனிக்கிழமையன்று பார்படாஸிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கீசி கார்டியின் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இதில் ஆட்டமிழக்காமல் ஹோப்  63(80) ரன்களும், கார்டி 48(65) ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

மேலும் 40.5 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரான இஷான் கிஷான் 55 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் குடாகேஷ் மோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இப்போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு ஓய்வளிக்கும் முடிவை ஆதரித்தார். உலகக்கோப்பை மற்றும் ஆசியக்கோப்பை காரணமாக இனிவரும் போட்டிகளின் அணித் தேர்வில் இந்தியா இதேபோன்ற உத்தியைப் பின்பற்றும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் எப்போதும் பெரிய போட்டிகளை பார்ப்போம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை வரவிருக்கும் இந்த முக்கியமான கட்டத்தில், வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு போட்டி மற்றும் ஒவ்வொரு தொடரைப் பற்றியும் நாம் கவலைப்பட முடியாது. அப்படிச்செய்தால், அது தவறு என்று நான் நினைக்கிறேன்,” இவ்வாறு அவர் கூறினார். 

ரோஹித் மற்றம் கோலி விளையாடாததால், இந்தியாவுக்கு எதிரான 55 மாத தோல்விக்கு மேற்கிந்தியத் தீவுகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளது (ஒன்பது போட்டிகளில் தொடர் தோல்வி). கடைசியாக 2019 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் மற்றும் விராட் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்தியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது போட்டி குறித்து பேசுகையில்,”தற்போது ஆமையாக இருப்பது முயல் அல்ல. உலகக்கோப்பையின் போது எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன். இத்தொடர் இப்போது 1-1 என சமநிலையில் உள்ளது. ஆனால் அடுத்த போட்டி பார்வையாளர்களுக்கும் வீரர்களுக்கும் நிச்சயம் உற்சாகமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவார்களா? என்பது குறித்து ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*