மேன் ஆஃப் தி சீரிஸ்’ விராட் மற்றும் ஜெய்ஸ்வால் அல்ல இவர் தான் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034904

டெல்லி: போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்துமுடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஸ்டாண்டிங் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மழை குறுக்கீடு காரணமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பல சாதகமான விஷயங்களைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 76ஆவது சர்வதேச சதத்தை  பதிவு செய்ததுடன் 206 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதற்கிடையில், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 44 பந்துகளில் 57 ரன்களும், இஷான் கிஷன் 34 பந்துகளில் 52 ரன்களும் என அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர்.

அதேசமயம் இப்போட்டியில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இருப்பினும் தொடர் நாயகன் விருது குறித்து அறிவிக்காதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் இதுகுறித்து கூறுகையில்,”இந்தியப் பந்துவீச்சாளர்களில் மிக முக்கிமான வீரர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், அரைசதமும் விளாசியுள்ளார். குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ரன்களை எடுத்தனர். ஆனால் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார்.

என்னைப் பொறுத்தவரை  ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’ அஸ்வின் தான்” இவ்வாறு ஜாகீர் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அஸ்வின் இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடியான ஃபார்மில் இருந்தார். பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 78 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

அதேசமயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். இளம் தொடக்க ஆட்டக்காரரான இவர், 387 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து, சர்வதேச அரங்கில் தனது அதிகபட்ச திறனை வெளிப்படுத்தினார். இத்தொடருக்குப் பிறகு, கேப்டன் ரோஹித் ஷர்மா சிராஜ், கிஷன் மற்றும் கோஹ்லி ஆகியோருக்கு சிறப்புப் பாராட்டை தெரிவித்தார். வேகத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எளிதாக மாற்றியதற்காக சிராஜை அவர் மிகவும் பாராட்டினார்.

Be the first to comment on "மேன் ஆஃப் தி சீரிஸ்’ விராட் மற்றும் ஜெய்ஸ்வால் அல்ல இவர் தான் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*