டொமினிகா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 போட்டிகள் கொணட் டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறதுறன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டடொமினிகாவிலுள்ள விண்ட்ஸர் பார்க் டொமினிசியா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கிரேக் பிராத்வைட் – டெக்நரைன் சந்தர்பால் ஜோடி நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் 12(44) ரன்கள் எடுத்திருந்த டெக்நரைனும், 20(46) ரன்களைச் சேர்த்திருந்த கிரேக் பிராத்வைட்டும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரெய்மன் ரெய்ஃபெர் வெறும் 2(18) ரன்களுக்கு ஷர்தூல் தாக்கூரிடம் ஆடட்மிழக்க, மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்வுட் 14(34) எடுத்தபோது முகமது சிராஜின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இதன்காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் உணவு இடைவெளிக்குப்பின் 13 ரன்களுடன் களத்திலிருந்த அறிமுக விரர் அலிக் அதானாஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்க, மறுமுனையில் ஜோசுவா டா சில்வா 2(13) ரன்னுடன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேஸன் ஹோல்டரும் 18(61) ரன்களுடன் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அல்ஸாரி ஜோசப் 4(11) ரன்னுடனும், மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47(99) ரன்கள் எடுத்திருந்த அலிக் அதானாஸும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நடையைக்கட்டினர்.
இறுதியில் களமிறங்கிய ரஹிம் கார்ன்வால் மட்டும் 19(34) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருக்க, மறுமுனையில் கேமர் ரோச் 1(16) ஜடேஜாவிடம் எல்பிடபள்யூ முறையிலும், ஜோமல் வேரிக்கன் 1(13) அஸ்வின் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் 64.3 ஓவர்களிலேயே அனைதத்உ விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் ஆண்டர்சன் சாதனையை முறியடித்தார். அதேசமயம் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்- ரோஹித் சர்மா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜெய்ஸ்வால் 40(73) ரன்களுடனும், ரோகித் சர்மா 30(65) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க முதல் நாள் முடிவில், இந்திய அணி 23 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.
Be the first to comment on "ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் 150 ரன்களுக்குள் சுருணட்து மேற்கிந்தியத் தீவுகள் அணி."