இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டம் மற்றும் ‘A’ அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், வேகப் பந்து பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர் மற்றும் அபிவிருத்தியாளர் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளருக்கான தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றார்.
51 வயதான தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆர்த்தர், தென்னாபிரிக்கா, (2005 முதல் 2010 வரை), அவுஸ்திரேலியா (2011 முதல் 2013 வரை) மற்றும் பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுக்கும் தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.
கிரேண்ட் ப்ளவர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் மற்றும் ‘A’ அணிக்கான தலைமைப் பயிற்சியாளருக்கான தனது கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்க்கவுள்ளார்.
48 வயதான சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரா கிரேண்ட் ப்ளவர், சிம்பாப்வே (2010 முதல் 2014 வரை) மற்றும் பாகிஸ்தான் (2014 முதல் 2019 வரை) கிரிக்கெட் அணிகளின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.
டேவிட் சேகர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக எதிர்வரும் 8 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.
டேவிட் சேகர் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (2015 முதல் 2016 வரை) அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஆர்தர், தற்போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்டு வந்தவர் இலங்கையின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்க. பெரும் எதிர்பார்ப்போடு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டார்.
ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்தளவு அவரின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சோபிக்கவில்லை.
இதனையடுத்து நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படுதோல்வி கண்டு தொடரிலிருந்து வெளியேறியது.
இதன் பின்னர் சந்திக்க ஹத்துருசிங்கவை நீக்க நடவடிக்கை எடுத்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனம். இடைக்கால பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் மிக்கி ஆர்தர். இவரது தலைமையில் பாகிஸ்தான் ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பை வென்றது. இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் முதல்தர அணி என்ற இடத்தைப் பிடித்தது. மேலும் குறிப்பிடத்தகுந்த சில வெற்றிகளைப் பெற்றது.
Be the first to comment on "இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் மிக்கி ஆர்த்தர்"