நியூ டெல்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ஆலோசனைக் குழு நேற்று (ஜூலை:3) மும்பையில் நடைபெற்றது. அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் பட்டியலிடப்பட்ட வேட்பாளர் மட்டுமே பங்கேற்றனர். இதில் முன்னாள் டர்ஹாம் பயிற்சியாளர் ஜான் லூயிஸ், 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த துஷார் அரோத்தே ஆகியோருடன் முன்னாள் ரஞ்சி வீரர் அமோல் மசூம்தாரும் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் பிடிஐயின் அறிக்கைப்படி, “இந்த நேர்காணலில் பங்கேற்ற முசூம்தார், மகளிர் அணிக்கான ஒன்றுதிட்டங்களுடன் பேசிய 90 நிமிட விளக்கக்காட்சி மிகத் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், ஈர்க்ககூடியதாகவும் இருந்ததாக ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. மற்றவர்கள் அளித்த விளக்கக்காட்சிகள் நன்றாக இருந்தன. இருப்பினும் மசூம்தாரின் விளக்கவுரை மிகவும் சிறப்பாக இருந்தது. எனவே பெரும்பாலும் அவரே இந்த பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்.
பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்திற்கான முக்கியப் பகுதி அவர்களின் உடற்தகுதி. இந்திய மகளிர் அணியிலுள்ள வீரர்கள் தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும். முசூம்தார், மனநலப் பயிற்சியாளர் உட்பட முழு அளவிலான துணைப் பணியாளர்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன தேவை என்பதை அவர் முழுமையாக அறிந்திருக்கிறார். எனவே இந்திய பயிற்சியாளருக்கு மற்றவர்களுடன் தொடர்புகொள்வது ஒரு பிரச்சனையல்ல. ஏனெனில் துணைக் கண்டத்தில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு” இவ்வாறு பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரமேஷ் பவார் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து இந்திய மகளிர் அணிக்கு தலைமை பயிற்சியாளர் இல்லாமல் இருந்தது. ஒருவேளை முசூம்தார் இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியுடன் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அங்கு இந்திய மகளிர் அணி மிர்பூரில் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட ஐசிசி உலகக்கோப்பை கைப்பற்றாத இந்திய மகளிர் அணி, இறுப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மகளிர் கிரிக்கெட் அணி எந்தெந்த துறைகளை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள முசூம்தார் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின், அடுத்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபரில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை மற்றும் வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி பட்டத்தை வெல்வதே அவரின் இலக்காக இருக்கும்.
முதல் தர வடிவத்தில் 11,167 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ள முசூம்தார், இதற்குமுன் மும்பை ரஞ்சி அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க தேசிய அணியுடனும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்."