2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை முன்னதாக நட்சத்திர வீரரின் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034851

மும்பை: நடப்பு ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது. இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனைத்தொடர்ந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

கடைசியாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக்ககோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பின்னர் இன்றுவரை ஒருமுறை கூட ஐசிசி உலகக்கோப்பையை வென்றிடாத இந்திய அணி , இந்தமுறை சாம்பியன் பட்டத்தை வெல்வதையே நோக்கமாக கொண்டு களமிறங்கவுள்ளது.

இருப்பினும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதைசமயம் இந்திய அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பரும் பேட்டருமான கே.எல்.ராகுல் ஆகியோரும் காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் தற்போது தான் குணமடைந்து வருவதால் அவரும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காயம் பிரச்சினைகளுக்கு மத்தியில், 1983ஆம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் கபில் தேவ், ஹர்திக் பாண்டியாவின் மற்றொரு சாத்தியமான காயம் அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்தினார்.

ஏனெனில் 2019ஆம் ஆண்டு முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்  காயத்திலிருந்து மீண்டு ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்தார் .அதேசமயம் நடப்பாண்டு டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய அவர் ,ஒருநாள் அணியிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் ஹர்திக் பந்துவீச்சில் பல சந்தர்ப்பங்களில் தயக்கம் காட்டினார். ஒருநாள் போட்டிகள் ஒருபுறம் இருக்க, டி20 போட்டிகளில் கூட தனது முழு பங்களிப்பை தர முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் வீரர்களுக்கு ஏற்படும் காயம் பிரச்சினைகள் குறித்து எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கபில் தேவ் இதுகுறித்து கூறுகையில், “காயங்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். இருப்பினும் அவர்களுடைய நிலைமை சீராகும் என நம்புகிறேன். ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன்.

ஏனெனில் அவர் மிக விரைவாக காயமடையக் கூடியவர். வீரர்கள் அனைவருடைய உடற்தகுதியும் நன்றாக இருந்தால், இந்தியா ஒரு சிறப்பான அணியாக மாற முடியும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எனவே வீரர்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள அதிக ஒருநாள் போட்டிகள் தேவைப்படுகிறது”  இவ்வாறு கபில் தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை முன்னதாக நட்சத்திர வீரரின் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*