வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற 6-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
2-வது 20 ஓவர் ஆட்டம் 8-ந்தேதி திருவனந்தபுரத்திலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதி மும்பையிலும் நடக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி 15-ந்தேதி சென்னையிலும், 2-வது போட்டி 18-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 22-ந்தேதி கட்டாக்கிலும் நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் கேப்டனாக நீடிக்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. கெய்ல் ஏற்கனவே இந்த ஆண்டில் எந்த போட்டியிலும் விளையாட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.
20 ஓவர் போட்டிக்கான அணியில் ஃபேபியன் ஆலன், ராம்தின் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் இடம் பெறவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக தடைவிதிக்கப்பட்ட நிகோலஸ் பூரன் 2-வது 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி அணியில் ஷாய் ஹோப் துணை கேப்டனாக நீடிக்கிறார்.
20 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதன்பிறகு அடுத்த உலககோப்பை போட்டி (2021-ம்) ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பைக்கான அணியை தயார்ப்படுத்த இந்த தொடரில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் போட்டி: பொல்லார்ட் (கேப்டன்), எவின் லிவிஸ், லென்டில் சிம்மன்ஸ், பிரெண்டன் கிங், ஹெட்மையர், ஃபேபியன் ஆலன், ரூதர்போர்டு, தினேஷ் ராம்தின், கேரி பியர், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், நிகோலஸ் பூரன், ஷெல்டன் காட்ரல், ஹேய்டன் வால்ஷ், கேஷரிக் வில்லியம்ஸ்.
ஒருநாள் போட்டி: பொல்லார்ட் (கேப்டன்), இவின் லிவீஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், கார் பியர், நிகோலஸ் பூரன், கீமோபால், பிரண்டன் கிங், சுனில் அம்ரீஸ், ஜேசன் ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல், ஜோசப், ரோமரியோ, ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ்.
Wow, incredible weblog format! How long have you
ever been blogging for? you make blogging look easy. The total
glance of your site is great, let alone the content material!
You can see similar here dobry sklep