ஆஸ்திரேலியா மரண மாஸ் , பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி

அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் களமிறங்கினர். 

ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 335 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 302 ரன்களில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் அந்த அணி ‘பாலோ ஆன்’ நிலையை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் 8-வது வீரராக களமிறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா 113 ரன்களும், பாபர் ஆசம் 97 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் என்ற மோசாமான நிலையில் இருந்தது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷான் மசூத் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அணியின் நாதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்க் டேவிட் வார்னருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Be the first to comment on "ஆஸ்திரேலியா மரண மாஸ் , பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி"

Leave a comment

Your email address will not be published.


*