புதுடெல்லி: 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், பஞ்சாப் கிங்ஸ், , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
வரும் மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்ற நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20ஐ தொடரில் விளையாடி வரும் அவர், வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் நெதர்லாந்துக்கு எதிராக பங்கேற்று விளையாடவுள்ளார்.
எனவே, வரும் மார்ச் 1ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராகவும், மார்ச் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் குயிண்டன் டி காக் பதிலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கே.எல்.ராகுலுடன் இணைந்து கைல் மேயர்ஸ் அல்லது தீபக் ஹூடா ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்கலாம் என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
டி காக்கைப் பொறுத்தவரை, கைல் மேயர்ஸ் தான் சிறந்த தேர்வாக இருப்பார். ஏனெனில் கைல் மேயர்ஸ் இடதுகை வீரர் மட்டுமல்ல டி20 போட்டிகளில் 135க்கும் நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டவர். ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கைல் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். எனவே ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராகுலுடன் இணைந்து மேயர்ஸ் தான் விருப்பமான தேர்வு” என்று லக்னோ அணியின் விவரங்கள் குறித்து பெயர் தெரியாத நிலையில், பிடிஐ- ஆல் மேற்கோள்காட்டப்பட்டது.
ஒருவேளை, லக்னோ அணி நங்கள் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களை கொண்டு மிடில் ஆர்டர் வரிசை மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்த முடிவுசெய்தால், ராகுலுடன் இன்னிங்ஸைத் தொடங்க தீபக் ஹூடா ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில், தனது இன்னிங்ஸை துவங்கிய ஹூடா இந்தியாவுக்காக சதம் அடித்துள்ளார். மேலும் பவர்பிளே ஓவர்களின் போது தனது மேம்பாடு திறன் மூலம், ஒரு சிறந்த வீரராக இருக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார்.
Be the first to comment on "லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கேஎல் ராகுலுடன் கைல் மேயர்ஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது"